Publish Date: Mon, 01 Nov 2021 (14:44 IST)
Updated Date: Mon, 01 Nov 2021 (14:46 IST)
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
தன ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் மேஷ ராசியினரே இந்த மாதம் எதைப்பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பண வரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக் காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய் யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவசொல் வாங்க நேரிடும்.
தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர் களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளை களிடம் நிதானமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மை களையும் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28