Publish Date: Mon, 01 Nov 2021 (15:04 IST)
Updated Date: Mon, 01 Nov 2021 (15:06 IST)
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன ஸ்தானத்தில் குரு, சனி - ரண் ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலவரம் உள்ளது.
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
பிறர் மதிக்கும்படி நடந்துகொள்ளும் தனுசு ராசியினரே நீங்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றும் திறமை பெற்றவர். இந்த மாதம் பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்கு றுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல் படுவது நல்லது.
தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி யில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங் களில் ஈடு படாமல் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்ப தில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: குரு ராகவேந்திரரை வியாழக் கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19