Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: குறைந்தது 19 பேர் பலி

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (21:27 IST)
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பட்டாலாவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த வெடிப்புக்கு பின்னர், தொழிற்சாலை கட்டடம் இடிந்தது. பல தொழிலாளர்கள் இதில் சிக்கியுள்ளனர்.
 
தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
 
 
இதுவரை 19 தொழிலாளர்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் இறந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பட்டாலா சார் ஆட்சியர் தீபக் பாட்டியா தெரிவித்துள்ளார்,
 
இந்தத் தொழிற்சாலை குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் இருந்ததாக பஞ்சாபில் உள்ள பிபிசி செய்தியாளர் குர்ப்ரீத் சாவ்லா தெரிவிக்கிறார்.
 
காயமுற்றோர் சிகிச்சை பெற்று வருவதாக பட்டாலா அரசு மருத்துவமனை டாக்டர் ஹர்பால் சிங் தெரிவித்துள்ளார், படுகாயம் அடைந்த 4 பேர் அமிர்தசரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், பட்டாலாவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிப்பில் உயிரிழப்புகளை அறிந்து பெரும் கவலையடைந்துள்ளேன். காவல் துணை ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இந்தி திரைப்பட நடிகர் சன்னி தியோலும், "பட்டாலா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் குறித்து அறிந்து கவலை அடைந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments