தென்னாப்பிரிக்காவின் க்ரூஜ்ர் தேசிய பூங்காவிலுள்ள சிங்கங்கள் ஜாலியாக சுற்றி திரிகின்றன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகமெங்கும் மனிதர்களின் நடமாட்டம் குறைந்துள்ளதை தென்னாப்பிரிக்காவின் க்ரூஜ்ர் தேசிய பூங்காவிலுள்ள சிங்கங்கள் அறிந்துகொண்டாவோ என்னவோ, அவை அரிதாக தென்படும் இடங்களில் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக திரிந்து வருகின்றன.
ஆம், இரவு நேரத்தில் எப்போதாவது தேசிய பூங்காவின் சாலைகளில் தென்படும் சிங்கங்கள், தற்போது பகல் நேரத்திலேயே கூட்டம் கூட்டமாக அதே சாலைகளில் உறங்கி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள இந்த பூங்காவில் சிங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் சுதந்திரமாக திரிய ஆரம்பித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.