Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதியின்றி நோயாளிகளுக்கு விந்தணுவை செலுத்தி 49 பேருக்கு தந்தையான மருத்துவர்

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (15:46 IST)
ஹாலாந்தில், மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் அனுமதி இல்லாமல் தனது விந்தணுவை செலுத்தியதன் மூலம் 49 குழந்தைகள் பிறந்துள்ளது உறுதியாகியுள்ளது.
 
டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் ஹாலந்தின் ரோட்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள அவரது மருத்துவமனையில் ஜேன் கார்பெட் தனது நோயாளிகளை கர்ப்பமாக்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
 
கடந்த வெள்ளியன்று நீதிபதி டிஎன்ஏ முடிவுகளை வெளியிட்டதும் இந்த செய்தி உறுதியானது. 2017-ல் அவர் தனது 89 ஆம் வயதில் மரணமடைந்தார். குழந்தைகளில் ஒருவர் தனது தந்தை கார்பெட் என்று தற்போது தெரியவந்தவுடன், இந்த விஷயம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
 
இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு சில குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர்களின் மூலம் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு குழந்தைக்கு மருத்துவரின் உருவ ஒற்றுமை இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments