Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபன்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது - அமெரிக்க பாதுகாப்புச் செயலர்

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:56 IST)
கடந்த பிப்ரவரி 2020-ல் தாலிபன்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் தோஹாவில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தான் ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்குலகப் படைகள் பின்வாங்கின. 

அந்த ஒப்பந்தம் ஆப்கன் படைகள் மற்றும் ஆப்கன் அரசின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க ராணுவ படைத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் மெக்கென்ஸி கூறினார். இவர் தான் அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து பின்வாங்கும் நடவடிக்கையை மேற்பார்வை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதிபர் ஜோ பைடன் படைகளைக் குறைக்க ஏப்ரல் மாதத்தில் உத்தரவிட்டது, தீவிர விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் கூறினார். அதே போல தோஹா ஒப்பந்தம், தாலிபன் குழுவினர் வலுவடைய உதவியதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாய்ட் ஆஸ்டின் கூறினார்.
 
தோஹா ஒப்பந்தத்தின் படி, தாலிபன்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்ட பின், தாலிபன்கள் ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்கத் தொடங்கியது என்றும், அதனால் ஒவ்வொரு வாரமும் ஆப்கன் தரப்பில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் கூறினார். 
 
நேற்று (செப்டம்பர் 29, புதன்கிழமை) பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் கூட்டம் நடந்தது. அக்குழுவின் முன்னிலையில் இக்கருத்துகள் கூறப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments