Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவது, அரசியல் தற்கொலையாக அமையும் - ஜெர்மி ஹண்ட்

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (20:28 IST)
பிரெக்ஸிட் பேச்சவார்த்தைக்கு புதிய குழுவை அமைக்க ஜெர்மி ஹண்ட் முன்மொழிந்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறபோது, ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுமேயானால், அது அரசியல் தற்கொலையாக அமையும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான ஜெர்மி ஹண்ட் எச்சரித்துள்ளார்.
 
ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுகின்ற நடவடிக்கை பொதுத் தேர்தலை கொண்டுவரும். இதனால் தொழிலாளர் கட்சி அதிகாரத்தை பெறலாம் என்று பிபிசியின் ரேடியோ 4இன் இன்றைய நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்,
 
வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெர்மி ஹண்ட், பிரதமர் தெரீசா மேயின் இடத்தை பிடிக்க போட்டியிடும் 10 பேரில் ஒருவராவார்.
 
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் இன்னொருவரான எஸ்தர் மைக்வே, அக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறாமல் இருப்பதே அரசியல் தற்கொலையாக அமையும் என்று கூறியுள்ளார்.
 
பிரிட்டன் இந்த ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள காலக்கெடு இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதியாகும்.
 
ஜூன் 7ம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தெரீசா மே, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவுடன், இந்த கட்சியின் தலைமையை தேர்தெடுக்கும் அதிகாரபூர்வ பணிகள் தொடங்கும்.
 
ஆனால், இந்த பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களிடையே மோதல்கள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.
 
ஜூலை மாத இறுதியில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பவர், பிரதமராகவும் பொறுப்பேற்பார்.
 
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு இருக்கின்ற ஒரே தீர்வு, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மூன்று முறை நிராகரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரதமர் தெரீசா மே நடத்திய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்று பிபிசியின் ரேடியே 4இன் இன்றயை நிகழ்ச்சி ஒன்றில் ஹண்ட் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கி நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது.
 
ஆனால், வட அயர்லாந்து ஜனநாயக ஐக்கிய கட்சியின் உறுப்பினர்கள், கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான ஐரோப்பிய ஆய்வக குழு உறுப்பினர்கள், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் உறுப்பினர்களை உள்ளடக்கிய பிரிட்டனின் புதிய பேச்சுவார்த்தை குழுவை ஏற்படுத்துவது, எந்தவித தீர்மானமும் நாடாளுமன்றத்தின் வழியாக மேற்கொள்ளப்படலாம் என்ற நம்பிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments