Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேனில் உள்ள இந்தியர்களுக்காக பாதுகாப்புத்துறை வழங்கிய அறிவுறுத்தல்கள்

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (00:33 IST)
யுக்ரேனில் குறிப்பாக கார்கிவ் பகுதியில் சிக்கியுள்ள தமது குடிமக்களுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அறிவுறுரை வழங்கியுள்ளது.
 
அதன்படி, ஏதேனும் கடினமான சூழ்நிலையில் இந்தியர்கள் சிக்கிக் கொண்டால், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அவர்களுக்கு சில குறிப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
 
உள்ளூர் விதிகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய தகவல்களையும் பாதுகாப்புத்துறை பகிர்ந்துள்ளது.
 
அதன் முக்கிய அம்சங்கள்:
 
எதிர்கொள்ள வேண்டிய கடினமான சூழ்நிலைகள்
 
விமான தாக்குதல், ட்ரோன் தாக்குதல்ஏவுகணை தாக்குதல்போர் ஆயுதங்களால் தாக்குதல்ஷெல் தாக்குதல்கையெறி குண்டுவெடிப்புபெட்ரோல் குண்டு தாக்குதல்கட்டட இடிபாடுகள் சரிவதுஇணைய இணைப்பு இல்லாததுமின்சாரம்/உணவு/தண்ணீர் தட்டுப்பாடுமிகவும் குளிர்ந்த காலநிலையை எதிர்கொள்வதுஅதிர்ச்சி அடையும் நிலையை அடைவதுகாயம் அல்லது மருத்துவ உதவி இல்லாத நிலைமைபோக்குவரத்து தட்டுப்பாடுராணுவ வீரர்களுடன் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் நிலை வருதல்சக இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மன வலிமையுடன் இருங்கள். 10 இந்திய மாணவர்களைக் கொண்ட சிறிய குழுக்களாக உங்களை ஒழுங்கமைக்கவும் உங்கள் இருப்பிடத்தை குழு ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்கவும் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதில் காணப்படும் அனைத்து தகவல்களையும் தூதரகத்திலோ டெல்லியிலோ பகிரவும்ஃபோன் பேட்டரியைச் சேமிக்க குழு ஒருங்கிணைப்பாளர் அல்லது துணை ஒருங்கிணைப்பாளரை மட்டுமே அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கவும். என்ன செய்யக்கூடாது உங்கள் பதுங்கு குழி, அடித்தளம் அல்லது தங்குமிடத்தை விட்டு வெளியேறாதீர்கள்நெரிசலான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் உள்ளூர் எதிர்ப்பாளர்களுடன் சேர வேண்டாம் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளை தொட வேண்டாம் ராணுவ வாகனங்கள் அல்லது அது தொடர்பான எதையும் படம் எடுக்க வேண்டாம் நேரலை போர் சூழ்நிலைகளை படம் எடுக்க வேண்டாம் எச்சரிக்கை சைரன் ஏற்பட்டால், முடிந்தவரை பதுங்குமிடம் தேடுங்கள். நீங்கள் திறந்த வெளியில் இருந்தால், வயிற்றை மண்ணை நோக்கிப்படுத்துபடி உங்கள் பையினால் உங்கள் தலையை மூடிக் கொள்ளுங்கள்.மது அல்லது போதைப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் குளிர்ச்சியைத் தவிர்க்கவும்ஈரமான சாக்ஸ் அணிய வேண்டாம் சேதமடைந்த கட்டடங்களை தவிர்க்கவும் குப்பைகள் ஜாக்கிரதைகண்ணாடி ஜன்னல்களிலிருந்து விலகி இருங்கள் சோதனைச் சாவடியில் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் போது திடீர் நடமாட்டங்களைத் தவிர்க்கவும் அல்லது தகாத செயல்களில் ஈடுபடாதீர்கள்.இந்திய குடிமக்களுக்கு உயிர்வாழும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய கிட் தயாராக வைத்திருப்பது ஒரு விஷயம். இதனுடன், ரஷ்யாவில் பேச்சுவார்த்தைக்கான மூன்று வரிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments