Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூல் தாக்குதல் - இதுவரை நடந்தவை: முக்கிய தகவல்கள்

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (23:42 IST)
தாலிபன் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த மக்களை இலக்கு வைத்து நேற்று இரு தாக்குதல்கள் நடைபெற்றன. இதுகுறித்த முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
காபூலின் விமான நிலையத்தில் நேற்று மாலை நேரத்தில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் அமெரிக்க மீட்புப் படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
 
காபூலில் நடைபெற்ற கொடூர தாக்குதல் குறித்து தான் `மனமுடைந்துவிட்டதாக` அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தாலிபனுக்கு எதிரான நடவடிக்கையை புஷ்ஷுக்கு பிறகு வழிநடத்திய ஒபாமா ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானில் பணியமர்த்தினார்.
 
தாலிபன்களுக்கு மத்தியில் குண்டுவைத்த கொடூர இயக்கம் எது? மாணவிகளைக் குறிவைப்பது ஏன்?
 
தாலிபன், வல்லரசுகளுக்கு தண்ணி காட்டும் துணிச்சலான பள்ளத்தாக்கு
 
காபூல் குண்டு வெடிப்பை தொடர்ந்து மேற்கத்திய நாடுகளை விமர்சித்துள்ளார் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கய் லாவ்ரோவ். "இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: முற்றிலும் அந்நிய மதிப்புகளை புகுத்த நினைத்தால் அது பேராபத்தாகதான் முடியும்." என இத்தாலியின் வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு தெரிவித்தார் செர்கய் லாவ்ரவ்.
 
இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஆப்கானிஸ்தானிலிருந்து விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 5 ஆயிரத்து 400 பேர் காபூல் விமான நிலையத்தில் காத்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
பிரிட்டனுக்காக பணியாற்றிய 8 ஆயிரம் ஆப்கானியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதில் பலர் அகதியாக கருதப்பட்டு பிரிட்டனில் நிரந்தரமாக வாழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நேற்றைய தாக்குதலில் பிரிட்டனை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூல் அல்லது தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயிலிருந்து 550 பேரை மீட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
காபூல்
 
நேற்று நடைபெற்றது ஒரே இடத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்தான் இருவேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெறவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கடைசி நிமிடம் வரை ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
நேற்றைய தாக்குதலில் காணாமல் போன தங்களது குடும்ப உறுப்பினர்களை ஆப்கன் மக்கள் தேடி வருகின்றனர். இதில் குழந்தைகளும் அடக்கம்.
 
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு அங்கு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது இந்நிலையில் நேற்றைய தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அங்கு மருத்துவ வசதிகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
 
ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில், இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை சர்வதேச சமூகம் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
 
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
 
காபூலில் சிக்கியுள்ளவர்களை மீட்பது தொடர்பாக ஆலோசிக்க தாலிபன்களின் பிரதிநிதிகளை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் சந்தித்ததாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேதியை தாண்டி கெடு நீட்டிக்கப்படாது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ உதவிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments