Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயகரா வாங்க செல்கிறீர்களா? நீங்கள் இதனை தெரிந்துக் கொள்ள வேண்டும்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (15:53 IST)
விறைப்புதன்மை இல்லாமல் இருத்தல் பிரச்சனையால் அவதியுறும் ஆண்களுக்கு இம்மருந்து உதவி புரியும் என்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள். அதே நேரம், பிற மருந்துகளை போல, இம்மருந்தும் சில பக்க விளைவுகளையும் உண்டாக்கும்.

 
சரி... இந்த வயகரா கனெக்டை வாங்கும் போது ஆண்கள் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
யார் இம்மருந்தினை எடுத்து கொள்ளலாம்?
 
விறைப்புதன்மை இல்லாமல் அவதியுறும் ஆண்கள் இம்மருந்தினை எடுத்து கொள்ளலாம். ஆனால், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இம்மருந்தினை வாங்க முடியாது. பெண்கள், தங்கள் இணையருக்காக வாங்கலாம். ஆனால், அதற்கும் மருந்தாளுனரின் ஒப்புதல் தேவை.
 
உடலுறவு கொள்ள தகுதியற்ற ஆண்கள் இம்மருந்தினை வாங்க முடியாது. அதாவது தீவிர இதய நோய் மற்றும் இரத்த நாளம் பிரச்சனை உள்ளவர்கள் இம்மருந்தினை வாங்க முடியாது.
 
இம்மருந்தினை வாங்குவதற்கு முன் யாருடனாவது கலந்தாலோசிக்க வேண்டுமா மற்றும் உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமா?
 
மருத்துவரிடம் உரையாடினாலே போதுமானது. உங்களது உடல்நிலை குறித்து அவருடன் ஆலோசித்து இம்மருந்தினை வாங்கலாம்.உடல் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை.

 
இம்மருந்து உண்மையிலேயே பலன் தருமா?
 
பெரும்பாலான சமயங்களில் இது பலன் தருகிறது. ஆனால், அனைவருக்கும் இது ஒரே மாதிரியான பலன் தராது. இம்மருந்து ஆண்குறியில் உள்ள ரத்த நாளங்களை தளர்வடைய செய்து, ரத்த ஓட்டத்திற்கு உதவி செய்கிறது.
 
இது உணவு அருந்தியோ அல்லது உணவு அருந்தாமலோ எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அதிகமாக உணவு உட்கொண்ட உடனே இம்மருந்தை எடுத்துக் கொண்டால், மருந்து வேலை செய்ய சில நேரங்கள் எடுக்கும்.
 
என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படலாம்?
 
தலைவலி, தலைசுற்றல்,மூக்கடைப்பு,குமட்டல்
 
அதே நேரம் நெஞ்சு வலி, பார்வை குறைபாடு ஏறப்பட்டாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
 
இணையத்தில் வாங்க முடியுமா?
 
வாங்கலாம்... ஆனால், மருந்தாளுநருடன் ஓர் இணையவழி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்