Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதி நொடி வரை மக்கள் வெளியேற்றப் பணிகள் தொடரும் - அமெரிக்கா

Webdunia
ஐஎஸ் குழுவினர் தாக்குதல் நடத்தலாம் என்கிற அச்சுறுத்தல்களுக்கும் இடையிலும், இறுதி நொடி வரை காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவோம் என அமெரிக்கா கூறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் 170 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள் என காபூலில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
 
காபூல் விமான நிலையத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த அச்சுறுத்தல்கள் இருப்பதாக பென்டகன் கூறுகிறது. பல நேட்டோ நாடுகள் தங்களின் அவசரகால விமான சேவைகளை நிறுத்திக் கொண்டுவிட்டன.
 
விமான நிலையத்தில் நிலவும் பாதுகாப்புப் பிரச்சனைகளை காரணமாகக் கூறி, பிரான்ஸ் வெள்ளிக்கிழமை தன் மீட்புப் பணிகளை நிறுத்திக் கொண்டது. பிரான்ஸ் 3,000 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டிருப்பதாகக் கூறுகிறது.
 
ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு அமெரிக்க படைகள் ஆஃப்கானை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்காவால் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
 
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் விமான நிலையத்தில் இருந்து கிளம்ப தயார் செய்து கொண்டிருப்பதாகவும், தாலிபன்கள் அடுத்த சில மணி நேரங்களில் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்கள் என தன் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாக காபூலில் இருக்கும் பிபிசியின் முதன்மை சர்வதேச செய்தியாளர் லைஸ் டாசெட் கூறுகிறார்.
 
விமான நிலையத்தில் சில பகுதிகளை தாங்கள் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டதாக வெள்ளிக்கிழமை இரவே தாலிபனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஆனால் அதை பென்டகன் மறுத்தது.
 
பென்டகன் கூற்றின் படி, விமான நிலையத்தில் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே இருக்கிறார்கள். விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தாலிபனுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
இரு வாரங்களுக்கு முன் தொடங்கிய மக்களை வெளியேற்றும் பணியில் இதுவரை 1,11,000 பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க குடிமக்கள், அமெரிக்க படைகளோடு வெளியேற முன்னுரிமை கொடுக்கப்படும். அவர்களை விமான நிலையத்துக்கு அழைத்து வர பல வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
 
ஆனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க தூதரகமோ, மக்கள் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் விமான நிலைய நுழைவாயில்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்துகிறது.
 
காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டது என பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் கூறினார்.
 
விமான நிலையத்துக்கு அருகில் இருந்த விடுதியில் இரண்டாவது வெடி விபத்து நிகழவில்லை என அமெரிக்க அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தி உள்ளனர்.
 
ஐ.எஸ்-கே என்றழைக்கப்படும் இஸ்லாமிய அரசு கொரோசன் என்கிற அமைப்பு வியாழக்கிழமை நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது.
 
இதற்கு இடையில், காபூலில் அடுத்த சில நாட்களில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த சில நாட்கள் மிகவும் அபாயகரமான காலமாக இருக்கலாம் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு ரயில் விபத்து: எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு.. தமிழக பகுதியில் கரை கடக்குமா?

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் சேராத மாணவர்களுக்கு தடை: அதிரடி அறிவிப்பு..!

காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments