Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்த அமெரிக்கா....

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (00:01 IST)
ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்த அமெரிக்கா, படிப்படியாக குறைக்க முடிவு செய்த பிரிட்டன்  நாடு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
ரஷ்ய நாட்டில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.
 
புதின் தலைமைக்கு அமெரிக்க மக்கள் அளிக்கும் இன்னொரு பெரிய அடி இது என்பது இதன் பொருள் என்று தெரிவித்துள்ளார் பைடன்.
 
"புதினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எண்ணெய், எரிவாயு விலை அதிகரிக்கும் என்ற பெரிய அளவிலான அச்சம் இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
 
பைடனின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து எண்ணெய் விலைகள் ஏற்கெனவே உயர்ந்துகொண்டுள்ளன.
 
ஐரோப்பாவைவிட விரைவாக இத்தகைய முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. காரணம், ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவை நம்பி இருப்பவை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் 10 எம்.எல்.ஏக்கள் விரைவில் தவெகவில் இணையபோறாங்க!.. செங்கோட்டையன் பேட்டி!...

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்ற கேரள மாணவி.. 19 வயதில் செய்த சாதனைக்கு குவியும் வாழ்த்து..!

முதல்வர் டிகே சிவகுமாரை சந்தித்த தொழிலதிபர் அதானி.. ராகுல் காந்திக்கு இது தெரியுமா?

மாணவிகளுடன் குளித்த பள்ளி முதல்வர்.. வீடியோ வெளியான உடன் சஸ்பெண்ட்...

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments