Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களிக்கும் முறையில் மோசடி நடப்பதாக குற்றம் சுமத்தும் டிரம்ப்

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (09:47 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவிலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

"என்ன நடக்கிறது என நாம் பார்க்க வேண்டும்," என வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாகாணங்களில் தபால் மூலம் வாக்களிக்கக் கோரி வருகின்றனர்.

புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் போட்டி வேட்பாளரான ஜோ பிடனிடம் அதிபருக்கான அதிகாரங்களை அமைதியான முறையில் வழங்குவாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "நான் வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். அது மோசமான ஒன்று," என டிரம்ப் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதேபோன்றதொரு பதிலைத்தான் அளித்திருந்தார் டிரம்ப். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்ட டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

அது அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என ஹிலாரி அப்போது விமர்சித்திருந்தார்.

இருப்பினும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று பதவியேற்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments