Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை ரஷ்யா திடீரென அதிகம் புகழ என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (10:30 IST)
இந்தியா இயல்பிலேயே பன்முனை உலகில் முக்கியமான தூண் ஆக இருக்க விரும்புவது மட்டுமின்றி, அது பன்முனை உலக அமைப்பை உருவாக்குவதற்கான மையமாகவும் இருக்கிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் சமீபத்தில் கூறினார்.
 
இது குறித்து பேசி லாவ்ரோவ், யுக்ரேனுக்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலையானது என்று கூறி அதன் வெளியுறவுக் கொள்கையையும் பாராட்டினார்.
 
ப்ரிமகோவ் ரீடிங்ஸ் சர்வதேச மன்றத்தில் பேசிய அவர், மேற்கு நாடுகள், தங்களுடைய ஆதிக்கம் செலுத்தும் வகையிலான சர்வதேச முறையை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது. மேலும் பன்முனை அமைப்பின் யதார்த்தத்தையும் அவை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.
புதிய சக்திகள் அமெரிக்கா தலைமையிலான உலகை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
 
ஆனால், மேற்கு நாடுகள் இந்த 'முறையை' வலுக்கட்டாயமாக நிர்வகிக்க விரும்புகின்றன. 5 தசாப்தங்களாக தொடர்ந்து கொண்டிரும் இந்த பழக்கத்தை விட்டுக்கொடுக்க அவை தயாராக இல்லை.
 
ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பு நாடுகளாக ஆக்க வேண்டும் என்பதையும் லாவ்ரோவ் வலியுறுத்தினார்.
 
இதற்காக இரண்டு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்றும் கூறினார். பன்முனை உலக ஒழுங்கமைப்பில் இந்த நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதற்கான விருப்பம் அதிகரித்திருப்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது என்றும் கூறினார்.
 
ப்ரிமகோவ் மற்றும் அவரது பல்முனை உலகம் பற்றிய கோட்பாடு
யெவ்கெனி ப்ரிமகோவ் ஒரு ரஷ்ய அரசியல்வாதியும், ராஜதந்திரியும் ஆவார். 1998 முதல் 1999ஆம் ஆண்டு வரை அவர் ரஷ்யாவின் பிரதமராக இருந்திருக்கிறார். அதற்கு முன்பு அவர் ரஷ்யாவின் வெளியவுறவுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.
1996ஆம் ஆண்டு அவர் வெளியவுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, ரஷ்ய அரசின் முன்னிலையில் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய கூட்டணி நாடுகள் அடிப்படையிலான ஒரு பன்முனை உலக ஒழுங்கு அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தார்.
 
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட ஒருமுனை உலக ஒழுங்குமுறைக்கு மாற்றாக இது கூறப்பட்டது.
 
அமெரிக்காவை மையப்படுத்திய வெளியவுறவு கொள்கையில் இருந்து ரஷ்யா மாற வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் கூறினார்.
 
இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா தனது நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
 
பன்முக உலக அமைப்பு என்பதானது ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
 
மேற்கு நாடுகளை பின்பற்றுவதற்கு பதில் தங்களுக்கு என சொந்தமான சுதந்திரமான பாதையில் கூட்டணி அமைக்க விரும்பும் நாடுகள் ஓரளவு பாதுகாப்பு அளித்துக் கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார்.
தன்னுடைய உரையில் பன்முனை உலக முறையை குறிப்பிட்டு, சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளைக் கொண்ட அமைப்பை மீண்டும் லாவ்ரோவ் வலியுறுத்தினார்.
 
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் கூட்டணி எனும் ப்ரிமகோவின் யோசனையானது பின்னர், பிரிக்ஸ் நாடுகள் என மாற்றமடைந்தது. மிகவும் சிலருக்கு மட்டுமே ரிக் (ரஷ்யா, இந்தியா, சீனா) இன்னும் செயல்படுவது தெரியும்.
 
இந்த கூட்டணியின் அடிப்படையில்தான் இந்த மூன்று நாடுகளின் வெளியவுறவுத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து சந்தித்துப் பேசுகின்றனர்.
 
இந்தியாவை அதிகமாக பாராட்டுவது ஏன்?
 
ரஷ்ய வெளியவுறவுத்துறை அமைச்சர் என்ற முறையில் ப்ரிமகோவின் பன்முனை உலக ஒழுங்கமைவு கோட்பாடு குறித்து லாவ்ரோஃப் நன்றாக அறிந்திருக்கிறார்.
 
இந்த முறையில் இந்தியாவுக்கு முக்கியமான பங்கிருப்பதை இப்போது அவர் பார்க்கிறார். ஆகவே, இதற்கு என்ன காரணம்?
 
ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பதில் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் நாடுகளாக ஆக வேண்டும் என்று ஏன் அவர் வலியுறுத்துகிறார்?
 
இந்தியா பெரும் பொருளாதார சக்தியாக மாற வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் உலகின் முன்னணி பொருளாதார நாடாக மாற முடியும் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்?
 
இந்தியாவின் பரந்த அளவிலான ராஜதந்திர அனுபவம், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதாக இருக்கும் மற்றும் ஆசியாவில் அதன் தலைமை குறித்து கவனத்தை ஈர்த்து வருகிறது என்று ஏன் அவர் கூறுகிறார்.
 
இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைத் தெரிந்து கொள்ள பிபிசி இந்தி, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகளுக்கான பேராசிரியர் சஞ்சய் குமார் பாண்டேவிடம் பேசியது.
 
"லாவ்ரோவின் இந்த கருத்து குறித்த பொருளை புரிந்து கொள்வதற்கு, நாம் கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டும். இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து ரஷ்யா புகழ்ந்து பேசுவது முதன்முறை அல்ல.
 
1955-56 மற்றும் 1971 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின் போதிருந்தே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது," என்று சஞ்சய் குமார் பாண்டே கூறினார்.
 
"அணிசேரா கொள்கை வடிவமைக்கப்பட்டபோதில் இருந்து கூட, சோவியத் யூனியன் இதனை அங்கீகரித்திருக்கிறது. இந்த அணிசேகராக் கொள்கை நாடுகள் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்க வேண்டும் என்று நம்புகிறது.
 
சோவியத் யூனியன் அவர்களுடனான உறவை முன்னெடுக்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
"சோவியத் யூனியன்(இந்த யூனியனில் ரஷ்யா ஒரு பகுதியாக இருக்க வேண்டும்) அணிசேரா நாடுகளில் கூட இந்தியாவுடனான உறவுகளை முன்னெடுப்பது பற்றி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 
லியோனிட் இலிச் காலகட்டத்தின்போது, இந்தியாவுடன் சோவியத் யூனியன் முக்கியமான ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இருந்தபோதிலும் 1990களில் ரஷ்யா, மேற்கு நாடுகளை நோக்கிய ஒரு பாணியை சிறிதளவு கொண்டிருந்தது.
 
ஆனால், 1996ஆம் ஆண்டில் ப்ரிமகோவ் ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் மூன்று நாடுகள் கூட்டமைப்பு பற்றி அதாவது RIC குறித்து பெரிதும் குரல் கொடுத்தார்," என்றார்.
 
"யூரேசியாவின் அச்சாணியாக இருக்கும் வெளியவுறவுக் கொள்கை போல ரஷ்யாவின் சுதந்திரமான மற்றும் தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கைக்கு ப்ரிமகோவ் ஆதரவாக இருந்தார்.
 
ஆனால், இந்தியா மற்றும் சீனாவுடனும் சிறப்பான உறவுகளை உருவாக்குவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது," என குறிப்பிட்டார்.
 
இந்திய வெளியவுறவுக்கொள்கை சுதந்திரமானதா?
 
இப்போது ரஷ்யா மீண்டும் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய மூன்று நாடுகள் கூட்டணி மற்றும் பன்முனை சர்வதேச ஒழுங்கமைவு குறித்து பேசியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை இந்த அமைப்பின் மையமாக லாவ்ரோவ் ஏன் கருதுகிறார்?
 
"2014ஆம் ஆண்டு முதன்முறையாக கிரைமியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது இந்தியா அதனை ஆதரிக்கவோ அல்லது கண்டனம் தெரிவிக்கவோ இல்லை.
 
கிரைமியாவில் ரஷ்யாவிற்கு சில நியாயமான பாதுகாப்பு கவலைகள் மற்றும் நலன்கள் இருக்கலாம் என்று அவர் கூறினார்.கிரைமியா காலகட்டத்தில் இருந்து இப்போது யுக்ரேன் தாக்குதல் ஆகியவற்றில் மேற்கு நாடுகளில் இருந்து இந்தியாவின் கொள்கை என்பது எப்போதும் வித்தியாசமாகவே இருக்கிறது.
 
"இந்தியா ரஷ்யாவை ஆதரிக்கவில்லை. ஆனால், மேற்கத்திய நாடுகளின் மொழியையும் அதன் தடைகளையும் பார்த்து, இந்த வழியில் இந்த விவகாரத்துக்கு தீர்வுகாணக்கூடாது என்று சொல்கிறது," என்றார். ரஷ்ய அதிபர் புதினுடன் பேசும்போது பிரதமர் நரேந்திரமோதி, இது போருக்கான தருணம் அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
 
ஆனால், ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகள் முன்மொழிந்த கண்டனங்களுக்கு இந்தியா ஆதரவு கூடத் தரவில்லை.
 
அவரது கூற்றின்படி," இந்த விவகாரங்களில் மேற்கு நாடுகளைப் போல அல்லாமல், இந்தியா அதன் சுந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்கிறது என்று ரஷ்யாவுக்கு இதை தெளிவுபடுத்தியிருக்கிறது," பன்முனை அமைப்பில் இந்தியாவை ஒரு மையமாக ரஷ்யா பார்ப்பதற்கு இதுவே காரணம்.
 
2014-ஆம் ஆண்டு மோதி அரசு வந்த பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் திருப்பம் ஏற்பட்டு, சுதந்திரமாகத் தோற்றமளிக்கிறது என்று சொல்லப்படுகிறது?
 
பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான விவகாரங்களை கையாளும் பிரபல இந்திய பத்திரிகையாளர் நயனிமா பாசு, இந்த கேள்விக்கு பதில் அளித்தார். "தொடக்கத்தில் இருந்தே இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற முயற்சிக்கிறது. முன்பு இந்த கொள்கை அணி சேராக் கொள்கை என அழைக்கப்பட்டது. இப்போது இந்த கொள்கை உத்தி ரீதியிலான தன்னாட்சிக் கொள்கையாக மாறியுள்ளது.
 
அண்மைகாலமாக இதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என நயனிமா கூறினார். மோதி அரசின் கீழ், இந்தியா அமெரிக்காவை நோக்கி தீர்க்கமாகத் திரும்புவதைக் காணலாம். இருப்பினும், விதிகள் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கை ஆதரிக்கும் அதன் நிலைப்பாடு அப்படியே உள்ளது.
 
இந்தியா - சீனா இடையிலான முரண்பாடு
 
2014ஆம் ஆண்டில் இருந்து சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ஊக்குவிப்பதில் இந்தியா வெற்றி பெற்றதா அல்லது மிகைப்படுத்தப்பட்டதா என்பதுதான் கேள்வி.
 
"முந்தைய அரசுகளும் பெரும் அளவுக்கு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால், கிரைமியாவை பற்றிய கண்ணோட்டம் மற்றும் அதன்பிறகு யுக்ரேன் மோதல் ஆகியவற்றில் மோதி அரசு, அதன் வெளியுறவுக் கொள்கையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது," என சஞ்சய் குமார் பாண்டே கூறினார்.
 
"இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மிகைப்படுத்துவதாக இருக்கிறது என்பது அல்ல. இதற்கான உதாரணங்கள் வெளிப்படையானவை.
 
இரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்ததற்கு இடையே, இந்தியா தொடர்ந்து அதன் சாபஹர் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்தது. இந்தியா 2016-17ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தது.
 
அதாவது எஸ்சிஓ அமைப்பு சீனாவின் தாக்கம் கொண்ட அமைப்பாக நம்பப்படுகிறது.இன்னொருபுறம், குவாடில் இந்தியாவின் பங்கேற்பை மேற்கத்திய நாடுகளுடனான ஒத்துழைப்புக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்," என்றும் அவர் கூறினார்.
 
ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் புதிய உலகளாவிய முக்கோண வரிசையில் அதாவது RIC நாடுகளை ஒரு பெரிய பங்காக லாவ்ரோவ் காண்கிறார், ஆனால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள இறுக்கமான உறவுகளால் அதன் முக்கியத்துவம் குறைந்து விடாதா?
 
இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்னைகள், வணிக ரீதியான பிரச்னைகள் இருப்பது சரிதான்.
 
ஆனால், சுற்றுச்சூழல், சர்வதேச அளவில் வணிக ஒப்பந்தங்கள் குறித்த கேள்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு நிலவுகிறது," என சஞ்சய் குமார் பாண்டே கூறினார்.
 
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினர் பதவி
ப்ரிமகோவ் ரீடிங்ஸ் சர்வதேச மன்றத்தில் பேசிய லாவ்ரோவ், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திர உறுப்பினர் ஆவதற்கு ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை விடவும் இந்தியா, பிரேஸிலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். சர்வதேச மற்றும் பிராந்திய முன்னோக்குகள் காரணமாக இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அதிக மதிப்புகளை சேர்க்க முடியும் என்று கூறினார்.
 
ஆனால், "இந்த தீர்மானம் என்பது ரஷ்யாவின் முடிவை மட்டும் சார்ந்த ஒன்றாக இருக்காது. இந்தியாவின் கோரிக்கையை சீனாவால் தடுத்து நிறுத்த முடியும்", என நயனிமா பாசு கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments