Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் ஓடிடி ரிலீஸ் தான்: அமிதாப்பச்சன் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
புதன், 20 மே 2020 (08:00 IST)
இனிமேல் ஓடிடி ரிலீஸ் தான்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன என்பதும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல் தெரியவில்லை என்பதால் படத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரித்த தயாரிப்பாளர்களின் நிலைமை திண்டாட்டமாக உள்ளது
 
இந்த நிலையில் தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்கள் ஏற்கனவே ஓடிடி பிளாட்பாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தமிழில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெங்குவின்’ மற்றும் அனுஷ்கா நடித்த நிசப்தம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது
 
இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்துள்ள ’குலாபோ சிடாபோ’என்ற திரைப்படமும் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அமிதாபச்சன் நடித்த ’குலாபோ சிடாபோ’என்ற திரைப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரெய்லர் மிக விரைவில் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேரன்போடு வாழும் வாழ்வைப் போதிக்கிறது.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய அமைச்சர்!

அதிரிபுதிரி வரவேற்பு… தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் மோகன்லாலின் ‘துடரும்’!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு… லைகா தயாரிப்பில் மெகா கூட்டணி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments