Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் தனுஷ் - அஜித் படம்! பாலிவுட்டில் மாஸ் காட்டுறாரே..

Advertiesment
Dhanush

Bala

, வியாழன், 12 பிப்ரவரி 2026 (11:01 IST)
தமிழ் சினிமாவில் இப்போது மிகவும் பிஸியான நடிகராக அறியப்படுபவர் நடிகர் தனுஷ். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் அவருடைய 55வது படத்தில் நடிக்க இருக்கிறார்.அந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி மற்றும்ஸ்ரீலீலா என இரண்டு கதா நாயகிகள் நடிக்க உள்ளனர். நடிகர் மம்மூட்டியும் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார்.
 
எந்த வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தன்னுடைய திருமண வாழ்க்கை பிரச்சினைக்கு பிறகு மிகவும் பக்குவப்பட்ட மனிதராகவே மாறியிருக்கிறார். அவரை பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. நடிகை மிருனாள் தாகூருடனான கிசுகிசுக்கும் எந்தவொரு பதிலும் தனுஷ் சொல்லவில்லை.
 
ஆனால் தனுஷை தன் சகோதரனாகவே பார்ப்பதாக மிருனாள் கூறியிருந்தார். எந்தவொரு சர்ச்சைக்கும் பதில் கூறாமல் அமைதியாக கடந்துவிடுகிறார் தனுஷ். மேலும் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு பல புதிய விஷயங்களை தனுஷ் கற்றுக் கொடுக்கிறார். பாலிவுட்டை பொறுத்தவரைக்கும் காலை 9 மணிக்குத்தான் சூட்டிங் ஆரம்பமாகும். மாலை 6 மணிக்கெல்லாம் பேக்கப் செய்து பார்ட்டிக்கு சென்றுவிடுவார்கள்.
 
ஆனால் கோலிவுட்டை பொறுத்தவரைக்கும் அதிகாலை 6 அல்லது 7  மணிக்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும். அதை தனுஷ் பாலிவுட்டிலும் ஃபாலோ செய்து வருகிறார். அதை அங்கு இருக்கும் பிரபலங்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் நடிகராக தொடர்ந்து நடித்து வரும் தனுஷ் இயக்குனராகவும் ஒரு சில படங்களை இயக்க தயாராக இருக்கிறார்,
 
அஜித்தை வைத்து தனுஷ் இயக்குவார் என்று ஒரு தகவல் வெளியானது. அதன் ஒன் லைன் ஸ்டோரியை அஜித்திடம் சொல்ல அது அஜித்துக்கு பிடித்துப் போனது. அதனை தொடர்ந்து தனுஷ் ஒரு பக்கம் பிஸியாக இருக்க அஜித் ரேஸில் பிஸியாக இருக்கிறார். ஆனால் இவர்கள் இணையப் போவது உறுதி. கூடிய சீக்கிரம் ஒரு சந்திப்பை நடத்தினால் எல்லாம் கூடி வரும் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சும்மா இருந்த சூர்யாவை சொறிஞ்சிவிட்ட ராதிகா!.. ஜோதிகாவை காதலிக்க இவர்தான் காரணம்!...