Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண அடி வாங்கியதா “ப்ரம்மாஸ்த்ரா”?? – ஆடியன்ஸ் ரியாக்சன் என்ன?

Brahmastra
Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (11:26 IST)
ரன்பீர் கபூர் நடிப்பில் பேன் இந்தியா படமாக வெளியாகியுள்ள ப்ரம்மாஸ்த்ரா படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்து அயன் முகர்ஜி இயக்கி வெளியாகியுள்ள படம் ப்ரம்மாஸ்த்ரா. இந்த படத்தில் ஆல்யா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ரீதம் சக்ரொபர்தி இசையமைத்துள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக இன்று இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. படத்தின் விஷூவல் எபெக்ட்ஸ் காட்சிகள், ஆக்‌ஷன் சண்டை காட்சிகள் ஈர்க்கும்படி உள்ளதாக பாடம் பார்த்த பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர் சண்டை காட்சிகள் தவிர படத்தில் கதையம்சம் சிறப்பானதாக இல்லை என்றும், காட்சிகள் மெல்ல நகர்வதாகவும் அதிருப்தி தெரிவித்தும் வருகின்றனர். பிரபல திரை விமர்சகர் தரன் அதார்ஷ் இந்த படம் ஒரு மிகப்பெரும் ஏமாற்றம் என்று கூறியுள்ளதுடன் 5க்கு 2 நட்சத்திரங்கள் மட்டுமே வழங்கியுள்ளார்.

படம் வெற்றியா, தோல்வியா என்பது இன்றைய நாள் இறுதி வசூல் நிலவரம் வெளியாகும்போது தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டால் ‘மதராஸி’ படத்தின் பிஸ்னஸில் ஏற்றம்!

என்னுடைய முதல் காதல் ஒரு விபத்தில் முடிவுக்கு வந்தது- ப்ரீத்தி ஜிந்தா உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments