Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பக் காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் பழங்கள் எது தெரியுமா...?

Webdunia
கர்ப்பக் காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் அடங்கிய உணவை எடுத்துக்கொள்வதால் குழந்தை பிறப்பில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் குறையக்கூடும்.
வைட்டமின் C,D, இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்துக்கள் துத்தநாகம், ஐயோடின் போன்ற சத்துக்கள் மிகவும் முக்கியமான  ஒன்றாகும்.
 
திராட்சையில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம் போன்றவை அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் தாராளமாக இதை  சாப்பிடலாம்.
பேரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் அதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை கிடைக்கும். மேலும் தேவையற்றக் கழிவுகளை அகற்றும்.  கர்ப்பிணிகள் மட்டுமல்லாமல் பால் கொடுக்கும் தாய்மாருக்கும் பேரிக்காய் ஏற்றது.
 
மாதுளம் பழத்தில் கர்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. கரிப்பிணிகள் தொடர்ந்து மாதுளம் பழத்தை சாப்பிட்டால், தாய்க்கும்  கருவிலிருக்கும் குழந்தைக்கும் தேவையான அளவு சத்து கிடைக்கும்.
 
கர்ப்பிணிகள் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணிப் பழங்களை சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளது.
 
ஆரஞ்சிபழத்தில் வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் உள்ளது. குழந்தைப் பிறக்கும்போது உணடாகும் பிரச்சனையைத் தடுக்கும். தினமும் ஒரு  டம்ளர் ஆரஞ்சுச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
 
வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதாம் சிவப்பணுக்கள்  குறைபாடு, ரத்தசோகை ஆகியவற்றுக்கு இது அருமருந்தாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments