Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது ஏன்...?

Webdunia
உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்டு 1 கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு மாதம் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக அறிவித்து, இதற்காக இன்று முதல் வருகின்ற 7-ஆம் தேதிவரை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்து 2 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குறைந்தது 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பால்  கொடுப்பதினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
 
குழந்தை பிறந்த உடனே இந்த தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில்  ஜீரணமாகிவிடும். இது தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல்  தடுக்கிறது. 
 
நன்மைகள்:
 
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். வேலைக்குச் செல்லும்  பெரும்பாலானோர், குழந்தைகளுக்கு புட்டியில் பால் கொடுகின்றனர் இது தவறு.
தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு, சர்க்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்ற சக்திகள் சரியான அளவில்  கிடைக்கிறது.
 
தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவே 6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது கெடுதலாகும்.
 
தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கிறது. 
 
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதில்லை  ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments