Publish Date: Fri, 02 Jun 2023 (18:03 IST)
Updated Date: Fri, 02 Jun 2023 (18:04 IST)
மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் பின்னர் தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து பிரபலமான நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார். இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.