Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 போட்டிகளுக்கு வருகிறது புதிய விதி!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:06 IST)
டி 20 போட்டிகளில் குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்காத அணிகளுக்கு புதுவிதமான தண்டனை விதிக்கப்பட உள்ளது.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத டி 20 போட்டிகள்தான் இப்போது அதிகமாக ரசிகர்களைக் கவர்கின்றன. இந்த போட்டிகளின் வெற்றிக்காக அணிகள் கடும் சிரத்தையுடன் செயல்படுகின்றன. இதனால் பந்துவீசும் போது அதிக நேரம் எடுத்துக்கொண்டு குறித்த நேரத்திற்குள் வீசி முடிக்காமல் காலதாமதம் செய்கின்றன.

இந்நிலையில் இதற்காக புதிய விதி ஒன்றை ஐசிசி உருவாக்கி உள்ளது. அதன்படி ’குறிப்பிட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரை வீசி முடிக்காத போது, மீதமிருக்கும் அனைத்து பந்துகளுக்கும் அந்த அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே உள்வட்டத்துக்கு வெளியே பீல்டராக நிறுத்தி பந்துவீச முடியும்’ என்று அந்த விதி உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேட்ஸ்மேன்களுக்கு முழு சாதமாக இருக்கும் டி 20 போட்டிகள் இப்போது மேலும் அதை வலுப்படுத்தும் விதமாக புது விதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments