Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீர், கோலியின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமை படுகிறார்.. பாகிஸ்தான் வீரரின் குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (10:07 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவரும் களத்துக்குள் மோதிக் கொள்வது இது முதல் முறை இல்லை.

இந்நிலையில் இந்த மோதல் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் வீரர் அகமது ஷெஹ்சாத் “கோலியிடம் சண்டை போட கம்பீர் வாய்ப்புகளை தேடுகிறார். கோலியிடம் கம்பீர் போல யாரும் தவறாக நடந்து கொண்டதில்லை. கம்பீர், ஒருமுறை தன்னுடைய ஆட்டநாயகன் விருதை கோலியோடு பகிர்ந்து கொண்டார். கோலி இதை உங்களிடம் கேட்டாரா?. ஆனால் கம்பீர் அதை செய்ததாலேயே கோலியோடு வாழ்நாள் முழுவதும் சண்டை போடலாம் என நினைக்கிறார்.

கோலிக்கு கிடைக்கும் மரியாதை மற்றும் அவரின் வளர்ச்சி குறித்து கம்பீருக்கு பொறாமை இருக்கிறது. கோலி மிக இளம் வயதில் சாதித்ததை கம்பீரால் அவர் வாழ்நாள் முழுவதும் அடைய முடியவில்லை.” என கம்பீரை தாக்கி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments