Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனிடம் கோபித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஸாரி ஜோசப்!

vinoth
வியாழன், 7 நவம்பர் 2024 (15:19 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தாலும் பெரிதாக எந்த வெற்றியும் பெறாமல் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேலும் அந்நாட்டு வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் இடையே சம்பள பிரச்சனையும் நிலவி வருகிறது. இதனால் பல வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தேசிய அணி பல தொடர்களை வரிசையாக தோற்று வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரைக் கூட காண அந்நாட்டு மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணி கொஞ்ச கொஞ்சமாக வெற்றிப் பாதைக்குத் திரும்பி வருகிறது.

இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் அந்த அணியின் அல்ஸாரி ஜோசப், அணிக் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வாக்குவாதம் செய்து மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஜோசப் ஒரு ஓவரை விக்கெட் மெய்டனாக வீசினார். ஆனாலும் ஃபீல்டிங் செட் செய்வதில் அவருக்கும் ஹோப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஜோசப் பெவிலியனுக்குத் திரும்பினார். பின்னர் அவர் திரும்பி வந்து தனது ஓவர்களை வீசினார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments