Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்கவுள்ள நிலையில் 2 வீரர்களுக்கு கொரொனா!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (20:42 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ள  நிலையில் இலங்கை வீரர்கள் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வங்கதேசம் இலங்கை அணிகள் மோதும்.

செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தியா - பாகிஸ்தான், செப்டம்பர் 3ஆம் தேதி வங்கதேசம் - ஆப்கானிஸ்தான், செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா - நேபாளம் மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்.

ஆசிய கோப்பை இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு தொடங்கும் என்று சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் அமைப்பு அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான்  ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபாளம் ஆகிய நாடுகள் விளையாடும்   ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில்,   இலங்கை வீரர்களான குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments