Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்ட்யா மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த கேப்டன் ஆகிவிட்டார்… இந்திய வீரர் பாராட்டு!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (09:44 IST)
இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கொண்டு டி 20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவே முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாண்ட்யாவின் கேப்டன்சியை பாராட்டியுள்ளார். அவரது யுட்யூப் சேனலில் “கேப்டனாக மிகக்குறுகிய காலத்திலேயே பாண்ட்யா வெற்றி பெற்றுவிட்டார். அவர் மிகவும் கூலாக அணியை மைதானத்தில் வழிநட்த்தி செல்கிறார். மேலும் அவர் புத்திசாலிதனமான வீரராகவும் உள்ளார். கபில்தேவ் உலகளவில் மிகச்சிறந்த வீரராக இருந்தார். ஒவ்வொரு காலத்திலும் அப்படி ஒரு வீரர் உருவாகுவார். அப்படி இந்த காலத்தின் வீரராக ஹர்திக் பாண்ட்யா உருவாகலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments