Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்துக்குட்டி தாய்லாந்து.. கத்துக்கொடுக்குமா இந்தியா! – ஆசியக்கோப்பை பெண்கள் அரையிறுதி!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (10:42 IST)
வங்கதேசத்தில் நடந்து வரும் ஆசியக்கோப்பை பெண்கள் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.

ஆசியக்கோப்பை பெண்கள் கிரிக்கெட்டின் 8வது தொடர் வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 நாட்டு அணிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் லீக் சுற்றின் முடிவில் டாப் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அதிக புள்ளிகளுடன் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதை தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளும் அரையிறுதியில் நுழைந்துள்ளன. நடப்பு சாம்பியனான வங்க தேசம் லீக் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

ALSO READ: ஆஸ்திரேலிய மைதானங்கள் சூர்யகுமாருக்கு உதவும்- முன்னாள் வீரர் கணிப்பு!

இந்நிலையில் இன்று தாய்லாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இந்திய பெண்கள் அணி ஆசியக்கோப்பையில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி. ஆனால் தாய்லாந்து இந்தியாவோடு ஒப்பிடுகையில் கத்துக்குட்டி அணி. எனினும் இந்த சீசனில் அவர்கள் சிறப்பாகவே விளையாடியுள்ளனர்.

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களாக விளையாடாத நிலையில் ஸ்மிருதி மந்தனா அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். இந்நிலையில் இன்று மீண்டும் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments