Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் மேட்ச்??

Arun Prasath
திங்கள், 28 அக்டோபர் 2019 (13:16 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என பிசிசிஐஅறிவித்துள்ளது.

வருகிற நவம்பர் மாதம், இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள வங்க தேச அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.  இப்போட்டிகளில் டி20 தொடர் நவம்பர் 3 முதல் 10 வரை நடைபெறுகிறது.

மேலும் டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 14 தொடங்கி 26 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிகளில் 2 ஆவது டெஸ்ட் போட்டியை கொல்கத்தாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து கூடிய விரைவில் கலந்தாலோசித்து பதில் அளிக்கப்படும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இரண்டு போட்டிகளில் முதல் போட்டி இந்தூரிலும், இரண்டாவது கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பகலிரவு ஆட்டம் பிசிசிஐ முடிவின் படி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றால், இந்தியாவின் முதல் டெஸ்ட் பகலிரவு போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments