Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியாளர் பொறுப்பு… டிராவிட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ!

ராகுல் டிராவிட்
Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (09:38 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறி வருகிறது.

ஆனால் இப்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத்  தவறவிட்டது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு வி வி எஸ் லஷ்மன் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்போது ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லபப்டுகிறது. அதன்படி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் டிராவிட் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கவேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ –யின் இந்த அழுத்தத்தை டிராவிட் ஏற்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

அடுத்த கட்டுரையில்
Show comments