Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோற்றாலும் ஸ்டைலில் மாற்றம் இருக்காது… இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (07:21 IST)
சமீபகாலமாக டெஸ்ட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இங்கிலாந்து அணி. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அந்த அணிக்கு கேப்டனாகவும் , பயிற்சியாளராகவும் பென் ஸ்டோக்ஸும் மெக்கல்லமும் பதவியேற்ற பின்னர்தான்.

டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடிய மெக்கல்லம், இப்போது தன்னுடைய பாணியை ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்கும் செயல்படுத்தியுள்ளார். இதை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாஸ்பால் கிரிக்கெட் என அழைக்கின்றனர்.

ஆனால் இந்த பாஸ்பால் கிரிக்கெட்டால்தான் முதல் டெஸ்ட் போட்டியை இழந்தது என்ற கருத்தும் உள்ளது. முதல் இன்னிங்ஸில் அவசரப்பட்டு ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்ததைக் குறிப்பிட்டு இந்த கருத்து பேசப்படுகிறது. ஆனால் முதல் போட்டியில் தோற்றாலும், எங்கள் ஸ்டைலில் மாற்றம் இருக்காது என பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

அதில் “இந்த தோல்வியால் எங்கள் ஸ்டைலில் எந்த மாற்றமும் இருக்காது. இன்னும் கூடுதல் அதிரடியோடுதான் விளையாடுவோம். எங்களுக்கு ஒரு ஸ்டைலை உருவாக்கி நாங்கள் அதில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் போட்டியில் தோல்வி அடைந்தாலும் கடுமையாக போராடி வெற்றிவரை சென்றோம் என்பதால் வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments