Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற சென்னை கிங்ஸ் அணி

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (18:43 IST)
14-வது ஐபிஎல்  தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.  இத்தொடரில் சென்னை கிங்ஸ் மும்மையுடன் விளையாட மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் இந்தாண்டு எப்போதும் நடத்தப்படும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இதுகுறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 14வது ஐபிஎல்  தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி வரும் மே 30 ஆம் தேதி முடியவுள்ளது.

இத்தொடரில் முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில், மும்பை – பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இதில், மொத்தம் 56 லீக் போட்டிகள் நடக்கும் எனவும்,  இவை , சென்னை,மும்பை,தில்லி, கொல்கத்தா, பெங்களூரு , ஆமதாபாத் ஆகிய மைதானங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் திறக்கப்பட்ட குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி, நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கிங்ஸ் அணி மும்பை அணியுடன் மோதுவதற்காக மும்பை சென்றுள்ளது. மும்பையில் முதல் ஐந்து லீக் போட்டிகளை சென்னை அணி விளையாடவுள்ளது. ஏற்கனவே சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புதிய ஜெர்ஸி அணிந்திருப்பது போன்ற புகைப்படம் தநேற்று வைரலானது. .இதில் மஞ்சல் வண்ணத்தில் மைந்தரா என்ற ஆன்லைன் நிறுவனத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments