Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலிக்கும் கோலிக்கும் இடையே பிரச்சனை இருந்தது… பரபரப்பைக் கிளப்பிய பிசிசிஐ அதிகாரி!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (08:26 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கும், முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன.

குறிப்பாக அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கும், கோலிக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அதை உறுதிப்படுத்துவது போல தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பேசியுள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சி உரையாடலில் “பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி, கோலியுடன் இணக்கமாக இருந்ததில்லை. அவர் ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் ஆக்குவதையும் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments