Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட டிவில்லியர்ஸ்… கிரிக்கெட்டுக்கு முழுக்கு!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (17:02 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நிலையில் இனிமேல் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் விளையாட மாட்டார் என தெரிகிறது. இந்நிலையில் “ஆர் சி பி அணிக்காக கோப்பையை பெற்று தராததற்காக அணி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments