Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

vinoth
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (07:41 IST)
நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சி எஸ் கே அணி. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய சென்னை அணி இலக்கை 20 ஆவது ஓவரில் எட்டியது. இந்த போட்டியில் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த போட்டியில் பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் கலக்கினார்.

லக்னோ அணி வீரர் ஆயுஷ் படோனியை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த அவர் ரிஷப் பண்ட்டின் கேட்ச்சையும் பிடித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் முதல் முதலாக 201 பேரை வெளியேற்றிய கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதில் 155 கேட்ச்களும் 46 ஸ்டம்பிங்குகளும் அடக்கம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments