Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை வீழ்த்த தோனி போட்ட வியூகம்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:38 IST)
நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியை சென்னை அணி வீழ்த்திய நிலையில் தோனி அமைத்த வியூகம் வைரலாகி வருகிறது.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன.

இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 216 ரன்களை குவித்த நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 193 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கோலியின் விக்கெட்டை வீழ்த்த தோனி போட்ட பிளான் வைரலாகி வருகிறது. 3 பால்களுக்கு 1 ரன் அடித்திருந்த கோலி 4வது ஓவரில் இளம் பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரியை எதிர்கொண்டார். அப்போது டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் எந்த பீல்டரும் இல்லாததை கண்ட தோனி அங்கு ஷிவம் துபேவை நிற்க வைத்தார்.

கோலி ப்ளிக் ஷாட் அடிப்பார் என தோனி யூகித்த படியே அடுத்த பந்திலேயே ப்ளிக் ஷாட் அடித்து ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் விராட் கோலி. இதற்காக தோனி அமைத்த வியூகம் தற்போது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் பந்திலேயே விக்கெட்.. பேட் கம்மின்ஸ் பந்தில் கருண் நாயர் அவுட்.

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments