Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணியில் அந்த வீரரை எடுங்கள்.. சிஎஸ்கே அணிக்கு அறிவுரை சொன்ன தோனி!

தோனி
vinoth
வியாழன், 31 அக்டோபர் 2024 (15:12 IST)
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான்!. அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது. ஆனால் அன்கேப்ட் ப்ளேயர் விதியால் தோனி அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில்தான் தான் தூதுவராக இருக்கும் சாப்ட்வேர் ஒன்றின் அறிமுக நிகழ்வில் தோனி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “43 வயதாகும் என்னால் இன்னும் ஐபிஎல் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என தோன்றுகிறது. கடந்த 9 மாதங்களாக நான் ஃபிட்டாக இருந்து வருகிறேன். அதனால் இரண்டரை மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவது எனக்குக் கடினமானது இல்லை” எனக் கூறியுள்ளார்.

ஆனாலும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்பது அனைவருக்கும் எழும் கேள்விதான். அதனால் தோனிக்குப் பிறகு சி எஸ் கே அணிக்கு ஒரு நீண்டகால கீப்பரும் பேட்ஸ்மேனும் தேவைப்படுகிறார். அதனால் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை எப்படியாவது சிஎஸ்கே அணியில் எடுக்க சொல்லி தோனி, அணி நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய MI vs DC போட்டியில் குறுக்கிடும் கனமழை? மைதானத்தை மாற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கோரிக்கை!

ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!

ஒரு சீசனில் அதிக தோல்விகள்… சி எஸ் கே படைத்த மோசமான சாதனை!

விராட் கோலிக்குப் பின் அவர் பேட்டிங்கைதான் ரசித்துப் பார்க்கிறேன் – சேவாக் சிலாகிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments