Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் ஆல்டைம் வீர்ரகள் பட்டியலில் தோனிக்கு இடமளிக்காத தினேஷ் கார்த்திக்… ரசிகர்கள் கோபம்!

vinoth
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (10:03 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆர் சி பி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து அவர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் வெளிநாட்டு டி 20 லீக் தொடர்களிலும் விளையாடும் அவர் சமீபத்தில் இந்தியாவின் ஆல்டைம் அணி என்ற ஒன்றை அறிவித்தார். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

ஆனால் அவர் அறிவித்த அணி டெஸ்ட் அணியா, ஒருநாள் அணியா என்று குறிப்பிடாத பட்சத்தில் குழப்பம் நிலவுகிறது. ஆனாலும் அணியில் யுவ்ராஜ் சிங் இருப்பதால் அது ஒருநாள் அணியாகதான் இருக்கும். அப்படி இருக்கையில் இந்தியாவுக்காக உலகக் கோப்பை பெற்றுத் தந்த கேப்டன் இடம்பெறாமல் எப்படி ஒரு அணி இருக்கும் என ரசிகர்கள் கோபாவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவரது அணியில் அஸ்வின் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருக்கெல்லாம் இடம் கொடுத்துள்ளதால் கண்டிப்பாக அது டெஸ்ட் அணியாகதான் இருக்கும் எனத் தோன்றுகிறது.

தினேஷ் கார்த்திக் அறிவித்த அணி
வீரேந்தர் சேவாக், ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, பும்ரா மற்றும் ஜாகிர் கான். 



 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments