Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகிய தினேஷ் கார்த்திக்; கேப்டனாக இயான் மோர்கன்! – சூடிபிடிக்குமா நைட் ரைடர்ஸ் ஆட்டம்?

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:42 IST)
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மாற்றப்பட்டுள்ளார்.

2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றில் 7 போட்டிகளில் மற்ற அணிகளோடு மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி ஐபிஎல் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த முதல் சுற்றில் 7 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வந்த தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இயான் மோர்கன் புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். இரண்டாம் சுற்று ஆட்டங்களுக்கு இவரே கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று தரவரிசையில் முதலில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியோடு இன்று மோர்கன் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி மோத உள்ளது. மோர்கன் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments