ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போரால் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. பின்னர் தற்போது வருகிற 17ம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் நடக்க உள்ளது. ஆனால் கால தாமதம் ஆனதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த மீதப் போட்டிகளில் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் அணிக்கு பக்கபலமாக மிட்செல் ஸ்டார்க் இருந்தார். தற்போது ஸ்டார்க் வர மாட்டார் எனப்படும் நிலையில் டெல்லி அணி வங்கதேச அணி பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மானை உள்ளேக் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு அரசியல் நிலவரம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருவதாக தெரிகிறது. இந்தியா - பாகிஸ்தான் போரின் போதுக் கூட வங்கதேச எல்லை மாநிலமான மேகாலயாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படி நமது நாட்டிற்கு எதிராக செயல்படும் நாட்டின் வீரரை அணிக்குள் கொண்டு வரக்கூடாது எனவும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் #BoycottDelhiCapitals என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
Edit by Prasanth.K
YES Boycott ????????
— Cosmos Hindu (@CosmosRajput) May 14, 2025
Shame shame Delhi Capitals
These Bangladeshi players have anti-India sentiments and support Pakistan.
Are Delhi Capitals not getting IPL players.????
Which we are against India against them#BoycottDelhiCapitals pic.twitter.com/mFe3WbmFXC