Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்க முடிவு?

vinoth
செவ்வாய், 5 நவம்பர் 2024 (07:48 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று போட்டிகளையும் வென்ற நியுசிலாந்து அணி முதல் முறையாக இந்திய அணியை வொயிட்வாஷ் செய்துள்ளது. இதன் மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது இந்திய அணி.

இதில் அதிகமாக விமர்சனங்களை எதிர்கொள்வது புதிய பயிற்சியாளர் கம்பீர்தான். கம்பீர் இந்திய அணிக்கு பொறுப்பேற்றதில் இருந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கிலும், தற்போது நியுசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கிலும் தோற்று சொதப்பியுள்ளது.

அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது இந்திய அணிக்கு புதிய மீட்பராக இருப்பார் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தோல்விகள் அதை உடைத்துள்ளன. மேலும் இப்போது கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக பயிற்சியாளர்கள் அணியின் தேர்வில் தலையிடமாட்டார்கள். ஆனால் கம்பீர் அணித்தேர்வு கூட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டார். இப்போது அவர் பயிற்சியாளர் பொறுப்பில் மட்டும் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments