ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. மதியம் 3.30 மணிக்குத் தொடங்கிய இந்த போட்டியைக் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர்.
வெயிலின் தாக்கத்தால் ரசிகர்கள் சோர்வடையக் கூடாது என்பதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு இலவசமாக தண்ணீர் பாட்டில் மற்றும் ORS பவுடர் கலந்த தண்ணீர் ஆகியவற்றை வழங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்போது 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் சேர்த்துள்ளது.