Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 4 June 2025
webdunia

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

Advertiesment
சின்னசாமி மைதானம்

vinoth

, சனி, 19 ஏப்ரல் 2025 (08:22 IST)
ஐபிஎல் தொடரில் பல மோசமான சாதனைகளைப் படைத்துள்ள அணிகளில் ஒன்று ஆர் சி பி. அந்த அணிதான் ஐபிஎல் தொடரில் மிகவும் குறைவான ஸ்கோரை எடுத்த அணி என்ற மோசமான சாதனையைத் தன் வசம் வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது தங்கள் சொந்த மைதானத்தில் அதிக தோல்விகளைப் பெற்ற அணி என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது.  நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டி மழைக் காரணமாக தாமதமானதால் 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த இலக்கை 12 ஆவது ஓவரில் துரத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இந்த தோல்வி பெங்களூர் அணிக்கு அவர்களின் சொந்த மைதானத்தில் 46 ஆவது தோல்வியாகும். இதன் மூலம் டெல்லி (45 தோல்விகள்) முந்தி முதல் இடத்துக்கு சென்றுள்ளது பெங்களூர் அணி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!