Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்ட குஜராத் ரசிகர்கள்… அப்படி என்ன சொன்னார்?

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (07:46 IST)
ஐபிஎல் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் வந்த ஹர்திக் பாண்ட்யா அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். அவரின் அணிமாற்றத்தால் மும்பை மற்றும் குஜராத் ஆகிய இரு மாநில ரசிகர்களும் ஹர்திக் மேல் கோபமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு அவர் டாஸ் போட வந்த போது அவருக்கு எதிராக மைதான ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போது ஹர்திக் பாண்ட்யா “நான் பிறந்தது குஜராத்தில்தான் என்றாலும், கிரிக்கெட்டில் நான் பிறந்தது மும்பையில்தான்” எனப் பேசினார். அவரின் இந்த பேச்சுக்குப் பிறகு மீண்டும் ரசிகர்கள் அவருக்கு எதிராக தொடர்ந்து கூச்சலிட தொடங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments