Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு ஒரேயொரு கேப்டன் போதுமா? பிரபலம் அளித்த பதில் !

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (09:46 IST)
உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளைப் போல இந்தியாவுக்கும் மூன்று வடிவிலான போட்டிகளுக்கு மூன்று கேப்டன்கள் தேவை என்ற குரல் எழுந்து வருகிறது.

உலகில் கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகளும் தற்போது தங்கள் கிரிக்கெட் அணிகளுக்கு ஒவ்வொரு வடிவிலான விளையாட்டுகளுக்கும் மூன்று கேப்டன்களை நியமித்துள்ளார். இதன் மூலம் கேப்டன்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கோலிதான் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் ஷர்மாவை டி 20 அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் எனக் கருத்துகள் எழுந்துவருகின்றன. இதுகுறித்து வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ‘இந்திய அணிக்கு கோஹ்லி, ரோகித் என இருவரையும் கேப்டனாக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கோலியை பொறுத்தவரை கேப்டனாக வேண்டும் என்றே, இவர் பிறந்துள்ளார் போல உள்ளது. ரோஹித் மும்பை அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

கோஹ்லி இல்லாத போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணிக்கு வெற்றியும் தேடித்தந்துள்ளார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு ஒரு கேப்டன் மட்டும் இருக்க வேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments