Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசியில் இவர்தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளரா?

vinoth
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (07:40 IST)
ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக அவர் பயிற்சியாளராக பணியாற்றினார். டெல்லி  அணி கடந்த 7 சீசன் களாக சிறப்பாக செயல்பட்ட போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும் குறிப்பாக கடந்த மூன்று சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட டெல்லி அணியை கொண்டு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் டெல்லி அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அணிக்கு ஒரு இந்திய வீரரைப் பயிற்சியாளர் ஆக்கவேண்டும் என்ற முடிவால் பாண்டிங் விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டெல்லி அணியின் இயக்குனரான கங்குலி, அந்த அணிக்கு யுவ்ராஜ் சிங் அல்லது ரெய்னாவை பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென விரும்பி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள்ளார்.  இவர் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியை நான்கு முறை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments