Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய டீம் பிடிக்கலைன்னா.. மேட்ச் பாக்காதீங்க! – கவாஸ்கர் சர்ச்சை பதில்!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (10:39 IST)
ஆசிய கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் குறித்த விமர்சனங்களுக்கு கவாஸ்கர் அளித்த பதில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



ஆகஸ்டு 30ல் தொடங்கி நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகாள் இலங்கை, பாகிஸ்தான் என இரு நாடுகளில் நடைபெறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான இந்திய அணி பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

இந்த அணியில் சிறந்த பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறாதது ரசிகர்களிடையே பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர் “ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுவிட்டது. இதன்பிறகு அஸ்வின் குறித்து பேச வேண்டாம். சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம். இதுதான் நம்முடைய அணி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மேட்ச் பார்க்காதீர்கள். குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுக்கவில்லை என விமர்சிப்பது தவறான மனநிலை” என்று பேசியுள்ளார்.

கடந்த உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ப்ளேயிங் 11-ல் அஸ்வினை எடுக்காதது குறித்து விமர்சித்தவரே சுனில் கவாஸ்கர்தான். ஆனால் அவரே இப்போது அஸ்வின் இடம்பெறாதது குறித்து விமர்சிக்க கூடாது என பேசி வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments