Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா மேட்ச்! – மழை வர வாய்ப்பு?

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (09:17 IST)
சென்னையில் இன்று உலகக்கோப்பை போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் மழை பெய்யுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.



ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தியாவின் 9 மைதானங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளின் நான்காவது போட்டியான இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போட்டி நடைபெறும் இன்றும் சென்னையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இலங்கையில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போதும் மழையின் குறுக்கீட்டால் சுவாரசியமான பல மேட்சுகள் சொதப்பலாகி போனது. இந்நிலையில் இன்று நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் மழை குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments