Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 255 ரன்களை குவித்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் 332 ரன்கள் தேவை. 9 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில் இன்று நான்காவது நாளில் பேட்டிங்கை தொடங்கியது.
அதிரடியாக பேஸ்பால் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சீராக விக்கெட்களை இழந்து வருகிறது. இந்நிலையில் இப்போது 8 விக்கெட்களை இழந்து 275 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது. இந்தியா வெற்றி பெற இன்னும் 2 விக்கெட்கள் மட்டுமே தேவையெனும் நிலையில் எளிதில் இந்த போட்டியை இந்திய அணி வென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.