Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஃபுல் பார்மில் இந்தியா''.. .உலகக் கோப்பை வரலாற்றின் கே.எல்.ராகுல் புதிய சாதனை

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (18:22 IST)
இந்தியாவில்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரில்  இன்றைய போட்டியில்  இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.
 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில், ரோஹித் சர்மா 61 ரன்னும், கில் 51 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும் அடித்தனர், ஸ்ரேயாஷ் அய்யர் 94 பந்துகளுக்கு 128 ரன்கள் அடித்து அசத்தினர். கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார்.

எனவே 50 ஓவர்களில்  4விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்தனர்.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் முதன் முறையாக முதல் 5 பேட்டர்கள் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

அதேபோல் மற்றொரு சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்திய வீரர் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் சதம் விளாசி, உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னடதாக கடந்த 2007 ஆம் ஆண்டு 81 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அதேபோல் கடந்த  போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 63 ரன்னில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ள நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

2வது டி20 கிரிக்கெட்: வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசியும் இந்தியா தோல்வி..

AUS vs PAK ODI: சொந்த மண்ணிலேயே வீழ்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா! - 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments