Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டூவர்ட் பின்னி அபார ஆட்டம்… தென் ஆப்பிரிக்கா லெஜ்னட்ஸை வீழ்த்திய இந்தியா லெஜண்ட்ஸ்!

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (07:57 IST)
இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் லெஜண்ட்ஸ் டி 20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான சீசன் நேற்று தொடங்கியது.

இதில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணியும் ஜாண்ட்டி ரோட்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பாக ஸ்டுவர்ட் பின்னி அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் மட்டுமே சேர்த்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

பதற்றமான சூழல். ஐபிஎல் தொடரைத் தள்ளிவைக்க பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments