25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

vinoth
புதன், 26 நவம்பர் 2025 (13:08 IST)
இந்தியா  மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியையும் இழந்த நிலையில் இந்த தோல்வியால் வொயிட்வாஷ் ஆகியுள்ளது இந்தியா.

இந்திய அணியின் மோசமான நிலைக்குக் காரணம் பயிற்சியாளர் கம்பீர்தான் என்று சொல்லப்படுகிறது. அவர் சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்து ஓய்வுபெறவைத்துவிட்டு பரிசோதனை என்ற பெயரில் அணியில் வீரர்களின் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அது இந்திய அணிக்குக் கைகொடுக்கவில்லை.

அதே போல அவரின் அணித் தேர்வு பொருத்தமற்றதாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. திடீரென்று நான்கு சுழல்பந்து வீச்சாளர்களை அணிக்குள் கொண்டு வருகிறார். ஆனால் அவர்களை முழுவதும் பயன்படுத்துவதில்லை. எந்த வீரருக்கும் அடுத்த போட்டியில் தாம் இருப்போமா என்பதே உறுதியில்லை எனும் சூழல்தான் நிலவுகிறது. இந்த கோமாளித் தனங்களால் இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. கடைசியாக 2000 ஆம் ஆண்டில் ஹென்ஸி க்ரோன்யே தலைமையில் தென்னாப்பிரிகக அணி இந்தியாவில் தொடரை வென்றது. அதன் பின்னர் தற்போது டெம்பா பவுமா தலைமையிலான அணி இந்திய அணியை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

ஸ்மிருதி தந்தை டிஸ்சார்ஜ்.. ஆனால் திருமண மறுதேதி அறிவிப்பு இல்லை.. என்ன நடக்குது?

5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் இந்தியா! ஜடேஜா - சாய் சுதர்சன் டிரா செய்வார்களா?

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்..!

மண்வெட்டியை மண்வெட்டி என்று சொல்லுங்கள்… நிதிஷ்குமாரை சாடிய ஸ்ரீகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments